வரணி குடமியன் பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான சந்திப்பு குடமியன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவர் மேலும் பேசியவை வருமாறு:-
“ புலிகளின் இராணுவப் பலத்தை பலவீனப்படுத்தியது சுயநலம் கலந்த தேசியவாத தலைவர்களின் காய் நகர்த்தல்கள்தான். யுத்த காலத்தில் புலிகளுடன் நேரடியாக பேச்சுக்களை மேற்கொள்ள முடியாததால் உலக நாடுகளால் புலிகளின் பிரதிநிதிகளாக அரசியல் பேச்சுகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் இதே கூட்டமைப்பினர்.
இவர்கள் உலகத்தின் பார்வையை தமிழர் உரிமை மீது செலுத்த விடாது புலிகளின் இராணுவ பரிணாமத்தின் மீது கவனம் செலுத்த வைத்ததன் மூலமே புலிகளிள் தலைமையை அரசியல் ரீதியில் தோற்கடிக்க வைத்தனர்.
இந்தியாவை பகைத்து விட்டு இலங்கையில் இருந்து எவ்விதமான ஆயுதப் போராட்டத்தையும் செய்ய முடியாது என்பது வெளிப்படையான விடயம். 1990 இல் இருந்து இன்று வரை வடக்கு மக்களை பாதுகாத்த பங்கு எமது கட்சிக்கே உரியது. இதில் யாரும் பங்கு கோர முடியாது. மக்கள் வறுமையிலும், பாதுகாப்பின்றியும் வாழ்ந்தபோது குடாநாட்டை பாதுகாக்க வராத கூட்டமைப்பினர் வட பகுதிக்கான தேர்தல் சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டவுடன் பதவி சுகத்துக்காக உடனடியாக குடாநாட்டுக்குள் வந்து முகாமிட்டனர்.
நீண்ட காலமாக தவறான தலைமைத்துவத்துக்கே மக்களாகிய நீங்கள் வாக்களித்து வருகின்றீர்கள். இதன் மூலம் தமிழர்களின் அழிவுகளுக்கு மக்களாகிய நீங்களும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளீர்கள் என்பதை உணர வேண்டும்.

ஈ.பி.டி.பி ஒரு ஜனநாயக அமைப்பு. நாங்கள் இணக்க அரசியலையே விரும்புகின்றோம். இதன் மூலம்தான் இலங்கை வரலாற்றில் தமிழர்களின் உரிமைகளையும்,வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்த முடியும். அதற்காகத்தான் அரசியல் பலம் குறைந்தவராக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
வெறும் ஆயிரம் உயிர்களுன் முடிய வேண்டிய போராட்டம் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பறிகொடுத்தும் தீர்வை எட்ட முடியாத அளவுக்கு தள்ளப்பட்டதற்கு எமது ஆரம்ப கால அரசியல் நகர்வுகள் எவ்வித மாற்றங்களும் இன்றி இன்றும் தொடர்வதும்தான் காரணம்.
ஈ. பி. டி. பி கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை நாங்கள் மக்களின் காவலர்களாகவே இருந்து வருகின்றோம். இதை பொறுக்க முடியாத தேசி வாதிகள் ஒவ்வொரு நாளும் எமது செயற்பாடுகளை விமர்சித்து மக்களின் வாழ்வியலை மேம்பட விடாத வகையில் ஊடகங்கள் வாயிலாக தவறான செய்திகளை மக்களுக்கு தெரிவித்தி வருகின்றனர். அபிவிருத்திக்கும், வேலை வாய்ப்புக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடி வரும் மக்கள் எதற்காக அவருக்கு அரசியல் பலத்தைக் கொடுக்க தயங்குகின்றீர்கள்?
மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பெற்றுக் கொடுக்கக் கூடிய சக்தியாக வட மாகாண சபை உள்ளது. ஆனால் தேசியம் பேசுபவர்கள் இதன் அதிகாரங்களை மக்களுக்கு பாதகம் நேரக் கூடிய வகையிலேயே பயன்படுகின்றனர் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் வாழ்வியலில் மாற்றம் வர வேண்டுமானால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அரசியலில் பலப்படுத்துங்கள். ”
இச்சந்திப்பில் சவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருக்குமரன், மெடிஸ்கோ, செந்தூரன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான உஷா, சிலோசினி, கிராம உத்தியோகத்தர்களான பிரதீபன், இராஜகுமார், பாடசாலை அதிபர் ஆகியோருடன் 400 இற்கும் மேற்பட்ட இப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.


