கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதி கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
முரசுமோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ்விடுதி நான்கு கட்டிடங்களைக் கொண்டது.
கொரிய அரசின் 37 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் இது நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
இவ்விடுதியை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன, ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, கொரிய தூதுவர் லூங் வூன் சம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
தூர இடங்களில் இருந்து முருகானந்தா கல்லூரிக்கு கற்பிக்க வருகின்ற ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ள அதே வேளை மாணவர்களின் கற்றல் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு இவ்விடுதி மூல்மான வசதி வாய்ப்புக்கள் பயன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
திறாப்பு விழாவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் சித்ரானந்தா, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், முருகானந்தா கல்லூரி அதிபர் வரதன், கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி போன்றோரும் கலந்து கொண்டனர்.