Blogger Widgets
>
Home » » யாழில் கலாசார சீரழிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

யாழில் கலாசார சீரழிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு!



தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களை தலைமை தாங்குகின்ற தலைவர்களின் சுய நலப் போக்கு ஆகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தாவின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பின்ருமான கே. வி. குகேந்திரன் தெரிவித்தார்.


வாழ்வதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சாவகச்சேரி மற்வன்புலவு மக்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.






இவர் இங்கு பேசியவை வருமாறு:-


“ தமிழ் மக்களின் அராசியல் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் முக்கியமாக இருப்பது தமிழ் மக்களை தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளின் திடம் அற்ற, சுயநலமான போக்குத்தான் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் என்று புலப்படுகின்றதோ அன்றுதான் நிரந்தர தீர்வொன்றை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


கடந்த முப்பதாண்டுகளுக்கு மேல் வடக்கு - கிழக்கு முழுவதையும் உள்ளடக்கியதாக தமிழீழத்தை மையப்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டம் தனி நபர் ஒருவரின் கைக்கு சென்றதால்தான் தமிழ் இனம் வரலாறு காணாத அழிவுகளையும், தோல்விகளையும் சந்திக்க வேண்டிய ஏற்பட்டது..


போர்க் குற்ற விசாரணையை சர்வதேசம் கொண்டு வருவதன் மூலம் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியோ, தனி நாடோ கிடைக்கப் போவதில்லை. இது சர்வதேசத்தின் கண் துடைப்பு நடவடிக்கை ஆகும். இதை வைத்து போலித் தேசியவாதிகள் மீண்டும் மக்களைக் குழப்பி சுய நல அரசியலை நடத்துகின்றார்கள்.


தமிழத் தேசியம் என்ற கோஷத்தின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாது. தமிழ்த் தலைவர்களின் தவறான செயற்பாடுகளால்தான் தமிழர்கள் ஒவ்வொரு அதிகாரத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றோம்.





அடிப்படையில் எதுவித குறிக்கோளும் இல்லாமல் கோஷமிடும் கட்சியைக் கொண்டிருக்கும் தேசிய பேசுபவர்கள் இதுவரை உங்களுக்கான நிரந்தரமான தீர்வு எதையும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்


இவர்கள் பதவிகளுக்காக மட்டும் மக்களை பகடைக் காய்களாக வைத்திருப்பதால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் அடியோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த மக்களின் அழிவில்தான் தீர்வு கிடைக்குமென்றால் அப்படிப்பட்ட தீர்வு யாருக்குத் தேவை? உங்கள் பிள்ளைகளை, உறவுகளைப் பறிகொடுத்து விட்டு நீங்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனமாற்றம் என்ற ஒன்று வரும் வரை தமிழர் வாழ்வில் எதுவும் மாறாது என்பது யதார்த்தமான உண்மை.


குடாநாட்டில் சமூக கலாச்சார சீர்கேடுகள் தலை தூக்கி உள்ள நிலைக்கு கூட்டமைப்பின் சில முக்கிய உறுப்பினர்களே காரணம் என்பதை அண்மைய சாவகச்சேரி வாள் வெட்டுச் சம்பவத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டு உள்ளது. நீங்கள் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளீர்கள். தொடர்ந்தும் வெட்டிப் பேச்சுக்கும் வீர வசனத்துக்கும் தலை சாய்க்காது, கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்க, அரசியல் ரீதியில் உங்கள் வாழ்வியலுக்கு துணை நிற்பவர்களுக்கு கரம் கொடுத்துத் தூக்கி விடுங்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பவர்களை தூக்கி எறிய நீங்கள் தயாராக வேண்டும். ”





Recent Post