Blogger Widgets
>

யாழில் கலாசார சீரழிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு!



தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களை தலைமை தாங்குகின்ற தலைவர்களின் சுய நலப் போக்கு ஆகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தாவின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பின்ருமான கே. வி. குகேந்திரன் தெரிவித்தார்.


வாழ்வதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சாவகச்சேரி மற்வன்புலவு மக்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.






இவர் இங்கு பேசியவை வருமாறு:-


“ தமிழ் மக்களின் அராசியல் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் முக்கியமாக இருப்பது தமிழ் மக்களை தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளின் திடம் அற்ற, சுயநலமான போக்குத்தான் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் என்று புலப்படுகின்றதோ அன்றுதான் நிரந்தர தீர்வொன்றை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


கடந்த முப்பதாண்டுகளுக்கு மேல் வடக்கு - கிழக்கு முழுவதையும் உள்ளடக்கியதாக தமிழீழத்தை மையப்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டம் தனி நபர் ஒருவரின் கைக்கு சென்றதால்தான் தமிழ் இனம் வரலாறு காணாத அழிவுகளையும், தோல்விகளையும் சந்திக்க வேண்டிய ஏற்பட்டது..


போர்க் குற்ற விசாரணையை சர்வதேசம் கொண்டு வருவதன் மூலம் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியோ, தனி நாடோ கிடைக்கப் போவதில்லை. இது சர்வதேசத்தின் கண் துடைப்பு நடவடிக்கை ஆகும். இதை வைத்து போலித் தேசியவாதிகள் மீண்டும் மக்களைக் குழப்பி சுய நல அரசியலை நடத்துகின்றார்கள்.


தமிழத் தேசியம் என்ற கோஷத்தின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாது. தமிழ்த் தலைவர்களின் தவறான செயற்பாடுகளால்தான் தமிழர்கள் ஒவ்வொரு அதிகாரத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றோம்.





அடிப்படையில் எதுவித குறிக்கோளும் இல்லாமல் கோஷமிடும் கட்சியைக் கொண்டிருக்கும் தேசிய பேசுபவர்கள் இதுவரை உங்களுக்கான நிரந்தரமான தீர்வு எதையும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்


இவர்கள் பதவிகளுக்காக மட்டும் மக்களை பகடைக் காய்களாக வைத்திருப்பதால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் அடியோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த மக்களின் அழிவில்தான் தீர்வு கிடைக்குமென்றால் அப்படிப்பட்ட தீர்வு யாருக்குத் தேவை? உங்கள் பிள்ளைகளை, உறவுகளைப் பறிகொடுத்து விட்டு நீங்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனமாற்றம் என்ற ஒன்று வரும் வரை தமிழர் வாழ்வில் எதுவும் மாறாது என்பது யதார்த்தமான உண்மை.


குடாநாட்டில் சமூக கலாச்சார சீர்கேடுகள் தலை தூக்கி உள்ள நிலைக்கு கூட்டமைப்பின் சில முக்கிய உறுப்பினர்களே காரணம் என்பதை அண்மைய சாவகச்சேரி வாள் வெட்டுச் சம்பவத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டு உள்ளது. நீங்கள் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளீர்கள். தொடர்ந்தும் வெட்டிப் பேச்சுக்கும் வீர வசனத்துக்கும் தலை சாய்க்காது, கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்க, அரசியல் ரீதியில் உங்கள் வாழ்வியலுக்கு துணை நிற்பவர்களுக்கு கரம் கொடுத்துத் தூக்கி விடுங்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பவர்களை தூக்கி எறிய நீங்கள் தயாராக வேண்டும். ”





வட மாகாண ஆளுனரின் 02 ஆவது பதவிக் காலம் ஆரம்பம்!

வட மாகாண ஆளுனராக இரண்டாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டு உள்ள ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன் தினம் கடமைகளை சம்பிரதாயமாக பொறுப்பேற்றார்.

இவருக்கு சர்வ சமய குருமார்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

இவ்வைபவத்தில் வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா, யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி, வட மாகாண சபை செயலாளர்கள், ஆளுனர் அலுவலக திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

புலிகளை பலவீனப்படுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே!

கடந்த காலத்தில் அரசியல் ரீதியான தீர்வை பெற முடியாமைக்கு காரணம் மக்களது கருத்துக்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும் புறம் தள்ளி விட்டு ஒரு தலைபட்சமாக தமிழ் தேசியவாத தலைவர்கள் மேற்கொண்டு வந்த போலித்தனமான அரசியல் வியூகங்கள்தான் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே. வி. குகேந்திரன் (வி. கே. ஜெகன்) தெரிவித்தார்.
வரணி குடமியன் பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான சந்திப்பு குடமியன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவர் மேலும் பேசியவை வருமாறு:-
“ புலிகளின்  இராணுவப் பலத்தை பலவீனப்படுத்தியது சுயநலம் கலந்த தேசியவாத தலைவர்களின் காய் நகர்த்தல்கள்தான். யுத்த காலத்தில் புலிகளுடன் நேரடியாக பேச்சுக்களை மேற்கொள்ள முடியாததால் உலக நாடுகளால் புலிகளின் பிரதிநிதிகளாக அரசியல் பேச்சுகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் இதே கூட்டமைப்பினர்.
இவர்கள் உலகத்தின் பார்வையை தமிழர் உரிமை மீது செலுத்த விடாது புலிகளின் இராணுவ பரிணாமத்தின் மீது கவனம் செலுத்த வைத்ததன் மூலமே புலிகளிள் தலைமையை அரசியல் ரீதியில் தோற்கடிக்க வைத்தனர்.
இந்தியாவை பகைத்து விட்டு இலங்கையில் இருந்து எவ்விதமான ஆயுதப் போராட்டத்தையும் செய்ய முடியாது என்பது வெளிப்படையான விடயம். 1990 இல் இருந்து இன்று வரை வடக்கு மக்களை பாதுகாத்த பங்கு எமது கட்சிக்கே உரியது. இதில் யாரும் பங்கு கோர முடியாது. மக்கள் வறுமையிலும், பாதுகாப்பின்றியும் வாழ்ந்தபோது குடாநாட்டை பாதுகாக்க வராத கூட்டமைப்பினர் வட பகுதிக்கான தேர்தல் சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டவுடன் பதவி சுகத்துக்காக உடனடியாக குடாநாட்டுக்குள் வந்து முகாமிட்டனர்.
நீண்ட காலமாக தவறான தலைமைத்துவத்துக்கே மக்களாகிய நீங்கள் வாக்களித்து வருகின்றீர்கள். இதன் மூலம் தமிழர்களின் அழிவுகளுக்கு மக்களாகிய நீங்களும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளீர்கள் என்பதை உணர வேண்டும்.
ஈ.பி.டி.பி ஒரு ஜனநாயக அமைப்பு. நாங்கள் இணக்க அரசியலையே விரும்புகின்றோம். இதன் மூலம்தான் இலங்கை வரலாற்றில் தமிழர்களின் உரிமைகளையும்,வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்த முடியும். அதற்காகத்தான் அரசியல் பலம் குறைந்தவராக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
வெறும் ஆயிரம் உயிர்களுன் முடிய வேண்டிய போராட்டம் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பறிகொடுத்தும் தீர்வை எட்ட முடியாத அளவுக்கு தள்ளப்பட்டதற்கு எமது ஆரம்ப கால அரசியல் நகர்வுகள் எவ்வித மாற்றங்களும் இன்றி இன்றும் தொடர்வதும்தான் காரணம்.
ஈ. பி. டி. பி கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை நாங்கள் மக்களின் காவலர்களாகவே இருந்து வருகின்றோம். இதை பொறுக்க முடியாத தேசி வாதிகள் ஒவ்வொரு நாளும் எமது செயற்பாடுகளை விமர்சித்து மக்களின் வாழ்வியலை மேம்பட விடாத வகையில் ஊடகங்கள் வாயிலாக தவறான  செய்திகளை மக்களுக்கு தெரிவித்தி வருகின்றனர். அபிவிருத்திக்கும், வேலை வாய்ப்புக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடி வரும் மக்கள் எதற்காக அவருக்கு அரசியல் பலத்தைக் கொடுக்க தயங்குகின்றீர்கள்?
மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பெற்றுக் கொடுக்கக் கூடிய சக்தியாக வட மாகாண சபை உள்ளது. ஆனால் தேசியம் பேசுபவர்கள் இதன் அதிகாரங்களை மக்களுக்கு பாதகம் நேரக் கூடிய வகையிலேயே பயன்படுகின்றனர் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் வாழ்வியலில் மாற்றம் வர வேண்டுமானால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அரசியலில் பலப்படுத்துங்கள். ”
இச்சந்திப்பில் சவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருக்குமரன், மெடிஸ்கோ, செந்தூரன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான உஷா, சிலோசினி, கிராம உத்தியோகத்தர்களான பிரதீபன், இராஜகுமார், பாடசாலை அதிபர் ஆகியோருடன் 400 இற்கும் மேற்பட்ட இப்பகுதி  மக்களும் கலந்து கொண்டனர்.

பிரபாகரனின் பரம்பரைக் கோவிலில் இன்று அம்மனுக்கு தேர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர்களுக்கு சொந்தமான வல்வை சிவன் கோவிலில் வாலாம்பிகா தேவிக்கு இன்று காலை தேர் உற்சவம் இடம்பெற்றது.
குருக்களை அழைத்து வருதலுடன் ஆரம்பித்து பின் 8.15 மணி அளவில் வசந்த மண்டப பூசைகள் மேற்கொள்ளப்பட்டு அம்பாள் தேரில் அமர்த்தப்பட்டு உலா வந்தார்.
தொடர்ந்து தங்கவேலாயுதம் மடத்தில் அன்னதானம் இடம்பெற்றது.

Recent Post